ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 3 பேர் பலி

ஓட்டலில் நடந்த பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 3 பேர் பலி
Published on

பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் ஹொக் சான் பகுதியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஓட்டலின் 5வது மாடியில் உள்ள அறையில் நேற்று இரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 3 பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com