

அபுஜா,
நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் எடோ மாநிலத்தில் ஆக்பா விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆயுதங்களை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பூங்காவிற்கு வந்தனர்.
அவர்கள் காவலுக்கு இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதன்பின்னர் பூங்கா மேலாண் இயக்குனரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.