அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் வழக்கமான ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ராணுவத்துக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது.

நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெலிகாப்டர்கள் கீழே விழுந்து அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com