பாகிஸ்தானில் மசூதி கட்டிடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 11 பேர் காயம்

பாகிஸ்தான் நாட்டில் கட்டப்பட்டு வந்த மசூதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் மசூதி கட்டிடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 11 பேர் காயம்
Published on

லாகூர்,

பாகிஸ்தானின் லாகூர் நகரில் கட்டப்பட்டு வந்த மசூதியில் தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கட்டிடத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்க முயன்றனர். எனினும், 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. உயிரிழந்தவர்கள் ஷெரீப் (வயது 40), மன்சூர் (வயது 45) மற்றும் ரியாஸ் (வயது 36) என தெரிய வந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com