

நைஜீரியா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 5 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுதொடர்பாக நைஜர் மாநில அவசரகால நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஆடு ஹுசைன் கூறுகையில், உள்ளூர் வியாபாரிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ஒரு சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது தீடீரென ஏற்பட்ட புயலால் கடுமையாக தாக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்தது. உள்ளூர் உதவியாளர்களின் உதவியுடன் அறுபத்தைந்து பயணிகள் மீட்கப்பட்டனர். பலத்த மழை தேடலுக்கு இடையூறாக இருந்தது என்று கூறினார்.