

பெஷாவர்,
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதியில் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் தோர்கார் மாவட்டத்தின் நல அமேஜை கிராமத்தில் வசித்து வந்த 80 பேர் பயணம் செய்தனர்.
அவர்கள் ஹரிப்பூர் நோக்கி சென்றபொழுது திடீரென படகு நடுவழியில் கவிழ்ந்தது. இதில் பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்பு படையினரால் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதிக எடையால் படகு விபத்தில் சிக்கியுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.