ஆப்கானிஸ்தானில் தேர்தல் வன்முறையில் 32 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தேர்தல் வன்முறையில் 32 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் தேர்தல் வன்முறையில் 32 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட அதிபர் தேர்தல் இறுதியாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

இது அங்கு 2001-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பின்பு நடந்து முடிந்து இருக்கும் 4-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் தற்போதைய அதிபர் அஷ்ரப்கனிக்கும், தலைமை நிர்வாகி அப்துல்லாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலின் போது நாடு முழுவதும் 132 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 32 பேர் உயிர் இழந்ததாகவும், 123 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 132 தாக்குதல்களில் 64 தாக்குதல்களுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com