

ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 3 நாட்களில், 7 ஆயிரத்து 125 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.4 சதவீதமாக குறைந்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 நாட்களில் 52 பேர் பலியானார்கள். இதனால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 423 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 501 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பொதுமக்கள் குழுவாக சந்திப்பதை தவிர்த்துக் கொண்டு, அவசியத் தேவை இருந்தால் மட்டும் வெளியில் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.