பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல்: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லாவோஸ்,

நைஜீரியாவின் தென்மேற்கு நகரமான இபாடானில் பள்ளி கண்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று அந்நகர போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த பள்ளிக்கூடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி அந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன் தினம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்களும் கொடுக்க ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.

இதனால், நிகழ்ச்சியை காணவும், பரிசு பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது . இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. மேலும், பலர் படுகாயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநில குற்றப் புலனாய்வு துறையின் குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் ஓயோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் அடேவாலே ஒசிபெசோ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com