பர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல்; பொதுமக்கள் 35 பேர் பலி

பர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் பலியாகி உள்ளனர்.
பர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல்; பொதுமக்கள் 35 பேர் பலி
Published on

வாகடூகு,

ஆப்பிரிக்க நாடான வடக்கு பர்கினே பாசேவில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பெதுமக்கள் 35 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 31 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள் ஆவர்.

சேம் மாகாணம் அர்பிந்தா நகரில் ராணுவ தளம் உள்ளிட்ட 2 இடங்களில் தீவிரவாதிகள் மேட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து விமானப்படை உதவியுடன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கெல்லப்பட்டனர். சண்டையில் 7 ராணுவத்தினரும் பலியாகினர். இத்தாக்குதலுக்கு அல் கெய்தா, ஐஎஸ் அமைப்புடன் தெடர்புடைய தீவிரவாதிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால தீவிரவாதிகள் நடத்திய வன்முறைகளில் நடந்த பயங்கர தாக்குதலில் இதுவும் ஒன்று என ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் கூறி உள்ளார்.

மேலும், "இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் விளைவாக 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்" என்று ட்விட்டரில் ஜனாதிபதி கூறி உள்ளார். பாதுகாப்பு படையினரின் "துணிச்சலையும் அர்ப்பணிப்பையும்" பாராட்டி உள்ளார்.

சூம் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம் மற்றும் அர்பிண்டா நகரத்தின் மீதான இரட்டை தாக்குதல்களில் 7 ராணுவ வீரர்கள் மற்றும் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மாலி மற்றும் நைஜரின் எல்லையில் உள்ள புர்கினா பாசோவில் தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com