இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 35- பேர் பலி எனத்தகவல்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 35- பேர் பலி எனத்தகவல்
Published on

ஜகார்தா,

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com