ஒரே மாதத்தில் 36 குழந்தைகள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் துயரம்

பாகிஸ்தானின் தார் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் 36 குழந்தைகள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் துயரம்
Published on

சிந்த்,

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் தார் மாவட்டத்தில் இந்துகளின் மக்கள் தொகை அதிகம். எனினும், பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றன.

கடந்த 2020ம் ஆண்டு 500 குழந்தைகளும், கடந்த 2021ம் ஆண்டு 600க்கும் மேற்பட்ட குழந்தைகளும் தார் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உயிரிழந்து உள்ளனர் என தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டின் முதல் மாதத்தில் தார் மாவட்டத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி ஐதராபாத்தின் சுகாதார துணை பொது இயக்குனர் இர்ஷாத் மேமன் கூறும்போது, ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதனால் ஏற்படும் இரும்பு சத்து பற்றாக்குறை உள்ளிட்டவற்றுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

ஒரு குடும்பத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போது அவர்கள் பசி, பாரம்பரிய கோளாறுகளுக்கு ஆளாவதுடன், அவர்களுடைய குழந்தைகள் மிக குறைவான எடையை கொண்டிருப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதுதவிர, ரத்த சோகை, நிம்மோனியா, அம்மை நோய்கள் மற்றும் சுவாச கோளாறுகள் ஆகியவற்றால் குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்துகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com