பிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 37 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்சில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் சிக்கி பலியாகினர்.
பிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 37 பேர் பலி
Published on

தவாவோ,

பிலிப்பைன்சின் தெற்கே அமைந்த நகரம் தவாவோ. இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பிடித்துள்ளது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 37 பேரும் சிக்கி பலியாகியுள்ளனர்.

இதுபற்றி தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த தீ பாதுகாப்பு துறை அதிகாரி கூறும்பொழுது, 37 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என கூறினார். இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அதிபரின் மகன் மற்றும் நகர துணை மேயரான பாவ்லோ டியூடெர்ட் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com