தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலி

தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலி
Published on

சியோல்,

தென் கொரிய நாட்டின் தலைநகர் சியோல் அருகே உள்ள இச்சியான் என்ற இடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

முன்னதாக அங்கு சுரங்க குடோன் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. தரை மட்டத்துக்கு அடியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று வெடிச் சத்தத்துடன் தீ பற்றியிருக்கிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும், 27 தொழிலாளர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 30 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பணியின்போது ஏற்பட்ட வெடிப்பு, இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com