அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 11 பேர் படுகாயம்

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலி 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 11 பேர் படுகாயம்
Published on

கலிபோர்னியா,

கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ர மண்டோ அருகேயுள்ள ரான்சோ தெக்மா என்ற இடத்தில் நடந்தது. அங்குள்ள வீட்டுக்குள் ஒரு மர்மநபர் புகுந்தான். பின்னர் அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். பின்னர் தான் எடுத்துவந்த வாகனத்தில் அந்த வீட்டின் கேட்டை உடைத்துக்கொண்டு வேகமாக பாய்ந்து சென்றான்.

இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். பின்னர் வெறியுடன் சென்ற அந்த நபர் ஒரு தொடக்க பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டான். அதில் ஒரு குழந்தை காயம் அடைந்தது. அங்கிருந்து வெளியேறிய அவன் ரோட்டில் சென்றவர்கள் மற்றும் கார்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். அதில் 10 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு துணை அதிபர் மைக் பென்ஸ், கலி போர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் ஆகியோர் கண்டனமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடை பெறுவது தொடர் கதையாகி விட்டது. கடந்தவாரம் டெக்சாசில் பாப்டீஸ்ட் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com