கொலம்பியாவில் கோர விபத்து: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது - பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் கோர விபத்து: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது - பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு
Published on

பொகாடோ,

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் இருந்து கீழே விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்துக்கு அந்த நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தனது இரங்கலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com