தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்து - 4 பேர் பலி

விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சின்லி நகரில் நோயாளியை ஏற்றுவதற்காக நேற்று மதியம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் நியூ மெக்சிகோ மாகாணம் அல்புகியூர்கியு நகரில் இருந்து சென்றது. விமானத்தில் 2 விமானிகள், 2 மருத்துவ ஊழியர்கள் என 4 பேர் பயணித்தனர்.
சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






