நேபாளத்தில் ஊடக தடைக்கு எதிராக போராட்டம்: வன்முறையாக மாறிய போராட்டத்தில் 20 பேர் உயிரிழப்பு


தினத்தந்தி 8 Sept 2025 4:42 PM IST (Updated: 8 Sept 2025 7:10 PM IST)
t-max-icont-min-icon

போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காத்மண்டு,

நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. நேபாள அரசின் சமூக வலைதள பேச்சுரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து தெருக்களில் ஒன்று கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் புகுந்தனர். பாதுகாப்புக்காக போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதற்கு எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மரக்கட்டைகளையும், தண்ணீர் பாட்டீல்களையும் போலீசார் மீது வீசியதுடன், அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

போராட்டத்தை கலைக்க ரப்பர் வெடிகுண்டு, கண்ணீர் புகை குண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்ட முயன்றனர். தடியடியும் நடத்தினர். இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து காத்மண்டுவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூடவும், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரத்பூர் உட்பட நாட்டின் பிற நகரங்களுக்கும் போராட்டம் பரவுதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து நேபாள அரசு விளக்கம் அளித்துள்ளது; அதில், சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. டெலிகிராம் ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் காரணம் காட்டி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பதற்றமான சூழலை கட்டுப்படுத்தவே சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நேபாள அரசு டிக்டாக்கை தடை செய்தது.நேபாள விதிமுறைகளுக்கு இணங்க தளம் ஒப்புக்கொண்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் அதற்கு தடை நீக்கப்பட்டது.

சமூக பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ச வலைதளங்களை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக புரட்சி வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

1 More update

Next Story