“போரில் இதுவரை 4,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்

போரில் ரஷ்யா சுமார் 4,300 வீரர்களையும், 146 டாங்கிகளையும் இழந்துள்ளது என்று உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
“போரில் இதுவரை 4,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்
Published on

கீவ்,

பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது பிப்ரவரி 24 முதல் போரை தொடர்ந்தார். உக்ரைன் வீரர்களும் விட்டு கொடுக்காமல் தங்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பொதுமக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷிய வீரர்களின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். உக்ரைனில் முறையான பயிற்சி இன்றி நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தியுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர். உக்ரைன் நாட்டு மக்களுக்காக ஏராளமானவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஷியாவின் போரை சமாளிக்க அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆயுதங்கள், பண உதவிகள் செய்து வருகின்றன.

நேற்றைய நிலவரப்படி ரஷியாவின் போர் நடவடிக்கையால் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இறந்ததாகவும், 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்ததாகவும் உக்ரைன் அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 4,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை சுமார் 4,300 ரஷிய வீரர்கள், 146 ராணுவ டாங்கிகள், 27 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்களையும் ரஷியா இழந்துள்ளது என்று உக்ரைனின் துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com