ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.5 அளவில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.5 அளவில் லேசான நிலநடுக்கம்
Published on

காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியிருப்பதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பைசாபாத் பகுதியில் இருந்து 52 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com