இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி
Published on

கான் யூனிஸ்,

இஸ்ரேல் - காசா போர், பணய கைதிகள் பரிமாற்றத்துக்கு அடுத்து இரண்டாம் கட்டமாக தீவிரம் அடைந்தது. காசாவின் குறிப்பிடத்தக்க பகுதியை கைப்பற்றி உள்ள இஸ்ரேல் அந்த வழியாக ஹமாஸ் அமைப்புக்கு தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை தடுத்து வருகிறது. மறுபுறம் ஹமாசை முற்றிலும் ஒழிக்க உறுதிபூண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்கா ஆதரவுடன் காசா பொதுமக்களுக்கு உதவுவதற்காக உதவி மையத்தையும் கடந்த மாதம் நிறுவி உள்ளது. இதன் மூலம் காசா மக்கள் பலர் உதவி பெற்று வரும் நிலையில், திடீரென உதவி மையத்தை நோக்கி வரும் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதே போன்ற மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்க -இஸ்ரேல் ஆதரவு உதவி குழுவால் நடத்தப்படும் உணவு வினியோக இடங்களை நோக்கி வந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் தொடர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாலஸ்தீனியர்கள் கூறி உள்ளனர். இதில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்ததாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகப்படும் வகையில் உதவி மையங்களை நெருங்கிய நபர்கள் மீது எச்சரிக்கையாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 55 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com