காபூல் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு

காபூல் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 46 மாணவிகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
காபூல் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர்.

அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிப் பணி அமைப்பு(யு என் ஏ எம் ஏ), காபூலில் உள்ள அதன் மனித உரிமைக் குழுக்கள் மூலம் உதவுவதாக தெரிவித்திருந்தது. பலியானவர்களில் பெரும்பாலோர் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள். சரியான பலி எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறி இருந்தது.

இந்நிலையில் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி வருகிறது. உண்மையை ஆராய்ந்து, வெளிப்படையான தரவுகளை வெளியிட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளது.

இதனிடையே ஹசாரா பகுதியில் இன்று மீண்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com