

செபு,
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள செபு மாகாணத்தில் சாலையில் குப்பை லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி முன்னால் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது. இதை தொடர்ந்து அந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.