நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்

நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
Published on

ஆம்ஸ்டர்டாம்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம். இந்நிலையில், ஆம்ஸ்டர்டாமில் நேற்று மாலை (அந்நாட்டு நேரப்படி) கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆம்ஸ்டர்டாமின் பிரபலமான டேம் சதுக்கத்தில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள சந்தைப்பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் பிடித்தனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com