மெக்சிகோவில் கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி

மெக்சிகோவில் கிரேன் விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
மெக்சிகோவில் கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் மெக்சிகன் மாகாணத்தில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சி பகுதியில் பாலம் ஒன்று கட்டும் பணி நடந்து வருகிறது.

இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். பாலத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஆதரவாக ஸ்டீல் பார்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில், 98 அடி நீள பார்களை அமைக்கும்போது, கிரேன் அதிக சுமையால் முறிந்து விழுந்துள்ளது.

அது தொழிலாளர்கள் மீது விழுந்ததில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com