2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
Published on

ஜெனீவா,

2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 அறிக்கையை ஐநாவின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

2020 முதல் 2030 வரையில் உலக அளவில் 50 கோடி மக்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் ஆண்டுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அளவுக்கு கூடுதல் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க மக்களை உடற்பயிற்சி, இதர செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்ய அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com