5,000 டன் எடைகொண்ட காங் கோன் போர்க்கப்பல் வடகொரியா அணுசக்தி படையில் இணைப்பு

ஒட்டுமொத்த கடற்படையையும் அணுசக்தி ஆயுதம் ஏந்திய படையாக மாற்ற வேண்டும் என்று கிம் ஜோங் உன் தெரிவித்தார்.
5,000 டன் எடைகொண்ட காங் கோன் போர்க்கப்பல் வடகொரியா அணுசக்தி படையில் இணைப்பு
காங் கோன் போர்க்கப்பல்
Published on

பியாங்யாங்,

அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட 'காங் கோன்' என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது.

புதிய போர்க்கப்பல் அறிமுகம்

வடகொரியா மற்றும் அமெரிக்கா - தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், தனது ராணுவ பலத்தை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து புதிய ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வடகொரியாவின் கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் 'காங் கோன்' என்ற புதிய போர்க்கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

'சோ ஹியோன்' வகையை சேர்ந்த இரண்டாவது போர்க்கப்பலான இது, பல கட்ட போர் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளைக் கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி படை

இக்கப்பலை கடற்படையில் இணைக்கும் விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்:"போர் காலங்களில் அணுசக்தி போர் அமைப்புகளை உடனடியாக இயக்கி, எதிரிகளுக்கு பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும்.

உத்தரவு

அதற்கு ஏதுவாக ஒட்டுமொத்த கடற்படையையும் அணுசக்தி ஆயுதம் ஏந்திய படையாக மாற்ற வேண்டும்."என்று ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பு சர்வதேச அரங்கில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com