லிபியா: 61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 51 பேர் பலி என அச்சம்?

படகு விபத்தில் காணாமல் போன மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டு வருகிறது.
லிபியா:  61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 51 பேர் பலி என அச்சம்?
Published on

பெங்காஜி

லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில் 61 பேர் பயணித்து உள்ளனர். அந்த படகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென நடுக்கடலில் கவிழ்ந்தது.

ராணுவம் மற்றும் கடற்படை

இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்களில் 10 பேர் நீந்தி உயிர் தப்பியுள்ளனர். மற்ற 51 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களில் ஒரு சிறுமி உள்பட 15 பேரின் உடல்கள் கரையோரம் ஒதுங்கின. அவற்றை செம்பிறை சங்கத்தினர் மீட்டு, கரையில் கிடத்தினர். படகு விபத்தில் காணாமல் போன மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com