

பெய்ஜிங்,
சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக சீனாவின் நிலநடுக்க மையம் கூறியுள்ளது.
பெய்ஜிங் நேரப்படி இரவு 9.41 மணியளவில் இந்த நிலநடுக்கம் எற்பட்டதாக ஷின்குவா பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.