நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை மாவட்டங்களான மனாங். டோல்பா மற்றும் மியாக்டி ஆகியவற்றிலும் உணரப்பட்டன.
ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
நிலநடுக்கம்;
Published on

காத்மாண்டு,

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட பெருவெள்ளம் ஏற்பட்ட நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோ லில் 5.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே சுமார் 375 கி.மீ. தொலைவில் உள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு, இரவு 9.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை மாவட்டங்களான மனாங். டோல்பா மற்றும் மியாக்டி ஆகியவற்றிலும் உணரப்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com