ஒரு நிமிடத்தில் 55 கார்ட்வீல்கள்: 3 வயது சீனச் சிறுவன் கின்னஸ் உலக சாதனை!

சிறுவன் பெங் யிஜோவ் ஒரு நிமிடத்தில் அதிவேகமாக 55 கார்ட்வீல்கள் சாகசம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
ஒரு நிமிடத்தில் 55 கார்ட்வீல்கள்: 3 வயது சீனச் சிறுவன் கின்னஸ் உலக சாதனை!
பெங் யிஜோவ்
Published on: 

பெய்ஜிங்,

சீனாவைச் சேர்ந்த 3 வயது குங்பூ சிறுவன், ஒரு நிமிடத்தில் 55 முறை கார்ட்வீல் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளான். 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

யார் இந்த சிறுவன்?

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரின் டாங்யின் கவுண்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் பெங் யிஜோவ் (வயது 3). இந்த சிறுவனை அன்புடன் 'ஜௌஜௌ' என அழைக்கின்றனர். இவரது பெற்றோர் பெங் யோங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்காப்புக் கலை பயிற்சியாளர்கள் ஆவர். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் தற்காப்பு கலைப் பள்ளி பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

6 மாதக் குழந்தையிலிருந்தே பயிற்சி

6 மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்தே குடும்பத்தின் குங்பூ பள்ளியில் வளர்ந்து வந்த பெங் யிஜோவ், தனது 2 வயதில் தாமாகவே கார்ட்வீல் செய்ய முயற்சிக்கத் தொடங்கியுள்ளார். சிறுவனின் திறமையைக் கண்ட கின்னஸ் நிறுவனம் குடும்பத்தைத் தொடர்பு கொண்டது.

கின்னஸ் உலக சாதனை

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் நடத்தி வரும் தற்காப்பு கலைப் பள்ளியின் பயிற்சி மைதானத்தில் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அன்று,16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கார்ட்வீல் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் பங்குபெற்ற சிறுவன் பெங் யிஜோவ் ஒரு நிமிடத்தில் அதிவேகமாக 55 கார்ட்வீல்கள் சாகசம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். இந்த நிலையில் 22-வது கின்னஸ் உலக சாதனை தினத்தை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி அன்று இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவிக்கப்பட்டது.

X