

சரஜேவோ,
தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் (ஒன்பது மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்கிரேட், ஜாக்ரெப் மற்றும் ஸ்கோப்ஜே வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அல்பேனியா மற்றும் தெற்கு இத்தாலியிலும் உணரப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.