இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Earthquake hits Southern Sumatra, Indonesia
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.20 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமிக்கான எந்த அறிவிப்பும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com