ஈரானில் 5.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரானின் புஷேர் நகரில் ரிக்டர் 5.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈரானில் 5.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

டெஹ்ரான்,

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரானின் புஷேர் அணு உலை அமைந்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக அணு உலையில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும், புஷேர் அணு உலையானது ரிக்டர் 8 வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com