

பைசாபாத்,
ஆப்கானிஸ்தானின் வடக்கே படக்ஷான் மாகாணத்தில் வாகனம் ஒன்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் யப்தல் இ பயன் என்ற மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த வாகனம் பைசாபாத் நகரில் பள்ளத்தாக்கு ஒன்றில் திடீரென கவிழ்ந்துள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்து உள்ளனர். டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.