

பீஜிங்,
சீனாவில் நேற்று புதிதாக 6 பேரை கொரோனா தாக்கி உள்ளது. இதில் 4 பேருக்கு எந்தவித அறிகுறியும் இன்றி நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 6 பேரில் 2 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறிகுறியின்றி பாதிக்கப்பட்ட 4 பேரில், 3 பேர் கொரோனா வைரஸ் பிறப்பிடமான உகான் நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.