அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்கள் தடை: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்கள் தடை: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 373 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த ஒரு வார காலத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரத்து 240 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் நடைமுறை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், அமெரிக்க ஊழியர்களின் பணிப்பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தற்காலிக வேலைகளுக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் பெற வேண்டும், அவர்கள் வாழ்வாதாரம் மீட்கப்பட வேண்டும். அமெரிக்க பணியாளர்களின் நலன்களைக் காக்க நான் இந்த தற்காலிக இடை நிறுத்த உத்தரவைப் பிறப்பிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com