மரியுபோல் தியேட்டர் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட சுமார் 600 பேர் பலி; அதிர்ச்சி தகவல்!

சுமார் 200 பேர் மட்டுமே தப்பித்தோம் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியதாக அசோசியேடட் பிரஸ்(ஏபி) நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Image Credit: Reuters
Image Credit: Reuters
Published on

கீவ்,

மரியுபோல் நகரில் கடந்த மார்ச் மாதம் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வழிபாட்டு தலங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், தியேட்டர்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்து இருந்தனர். அப்படி அப்பாவி மக்கள் குழந்தைகளுடன் அந்த தியேட்டரில் தஞ்சமடைந்திருந்தனர்.

ஆனால், தியேட்டரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 300- பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த எண்ணிக்கை அதை விட அதிகம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மார்ச் மாதம் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றின் மீது ரஷியா குண்டுவீசித் தாக்கியதில் கிட்டத்தட்ட 600 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது ஏபி செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முந்தைய மதிப்பீட்டில் இருந்த 300 இறப்பு எண்ணிக்கையை விட பலி எண்ணிக்கை இருமடங்காக இருப்பதாக இப்போது விசாரணை கூறுகிறது.

உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து ரஷிய படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த தாக்குதல் தான் மிக மோசமான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது, அந்த கட்டிடத்தின் வெளியே தரையில் "குழந்தைகள்" என்ற வார்த்தை ரஷிய மொழியில் தெள்ளத்தெளிவாக ராட்சத எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அப்படியிருந்தும், வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு, கட்டிடம் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த போர்விமானத் தாக்குதலின் போது சுமார் 1,000 பேர் வரை தியேட்டர் உள்ளே இருந்தனர் என்று தாக்குதலில் உயிர்பிழைத்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் சுமார் 200 பேர் மட்டுமே தப்பித்தோம் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியதாக அசோசியேடட் பிரஸ்(ஏபி) நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com