சிரியாவில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்ப முயன்ற சதி முறியடிப்பு: அமெரிக்கா தகவல்

சிரியாவில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்ப முயன்ற சதி முறியடிப்பு: அமெரிக்கா தகவல்
Published on

வாஷிங்டன்,

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள சிறைகளில் இருந்து 6,000 பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல முயன்றதை முன்கூட்டியே கண்டறிந்த அமெரிக்க உளவுத்துறை, அவர்களை ரகசியமாக ஈராக்கிற்கு மாற்றி அச்சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.

இந்த இடமாற்றத்திற்கு மனித உரிமைகள் அமைப்புகள் (Human Rights Watch) எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈராக்கில் அவர்களுக்கு முறையான விசாரணை இன்றி மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இந்த 6,000 பேரும் தப்பியிருந்தால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உடனடியாக மீண்டும் வலுப்பெற்றிருக்கும் என்றும், அது உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது குழுவினர் ஒரு "பிரம்மாண்டமான பிரச்சனையைத்" தீர்த்துள்ளதாகவும், இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com