பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு
Published on

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரு நாடுகளிலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 42 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து நேற்று நியூசிலாந்தின் வெலிங்டன்னில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். ஏற்கனவே நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை கடும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸில் அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மாஸ்பேட் மாகாணத்தின் முக்கிய தீவான மாஸ்பேட்டில், உசன் நகராட்சியில், அருகிலுள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் (ஏழு மைல்) தொலைவில் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும், ஆனால் சேதம் அல்லது உயிரிழப்பு பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கங்கள் பிலிப்பைன்சின் தினசரி நிகழ்வாகும், இது பசிபிக் "ரிங் ஆப் பயர்" பகுதியில் அமைந்துள்ளது, இது ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாட்டின் ஒரு வளைவு ஆகும்.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com