எல் சால்வடார் நாட்டில் ஒரே நாளில் 62 பேர் கொலை; அவசரநிலை பிறப்பிப்பு

எல் சால்வடார் நாட்டில் ஒரே நாளில் 62 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
எல் சால்வடார் நாட்டில் ஒரே நாளில் 62 பேர் கொலை; அவசரநிலை பிறப்பிப்பு
Published on

சான் சால்வடார்,

எல் சால்வடார் நாட்டில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. பல கொலைகார கும்பல்கள் மிரட்டல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதிபர் நயீப் புகெலே 2019ம் ஆண்டு பொறுப்பேற்றதும் திட்டமிட்ட குற்ற செயல்களை ஒழிப்பேன் என்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார்.

எனினும், 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3 நாட்களில் 50க்கும் கூடுதலான மக்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து சிறையில் உள்ள கொலைகார கைதிகளுக்கு 24/7 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த கும்பலில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிறைக்கு பின்னால் இருந்து கொண்டு கொலைக்கான பல உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன என கூறிய அதிபர் புகெலே, எதிரி குழுக்களை சேர்ந்த கைதிகளை சிறைச்சாலையில் பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டும்.

இதனால், அவர்கள் தொலைபேசி வழியே தொடர்பு கொள்வது தடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரே நாளில் 62 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இது 1992ம் ஆண்டு நடந்த உள்நாட்டு கலகத்திற்கு பின்பு அதிகளவிலான எண்ணிக்கை ஆகும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஒன்றாக கூடுதல், வாரண்ட் இன்றி கைது செய்தல் மற்றும் தொலைபேசி அழைப்புகளை கண்காணித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com