ஈஸ்டர் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

ஈஸ்டர் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது.
ஈஸ்டர் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
Published on

ஹங்கா ராவோ,

பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு ஈஸ்டர் தீவு. சிலி நாட்டின் ஆளுகைக்குட்ப்பட்ட இந்த தீவில், 2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 7 ஆயிரம் மக்களே வசிக்கின்றனர். இந்த தீவில், உள்ளூர் நேரப்படி காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்தும் தகவல் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com