கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
Published on

வாஷிங்டன்

அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் இது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

பொகோட்டாவை சேர்ந்த முதியவர் கூறுகையில்,

நிலநடுக்கம் தாக்கம் உடனடியாக இருந்தது. கட்டடங்கள் அசைந்தன, சைரன்கள் ஒலித்தன, பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தெருக்களில் குவிந்தனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com