

இது நேட்டோ படைகள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் விரைவான முன்னேற்றத்தை தொடர்வதில் தலீபான்கள் தீவிரம் காட்டியதின் விளைவு ஆகும். ஆனால் அங்கு தலீபான் பயங்கரவாதிகள் மீது உள்நாட்டு படைகள் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை அதிரடியாக மீட்டன. இந்த தாக்குதலில் 69 தலீபான் பயங்கரவாதிகளை உள்நாட்டு படைகள் கொன்று குவித்துள்ளன. 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலீபான் பயங்கரவாதிகளின் ஏராளமான ஆயுதங்களையும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.