இரையாக நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய கழுகு!!!

கழுகு ஒன்று தனது இரை என நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. #EagleAttack
இரையாக நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய கழுகு!!!
Published on

ஐஸிக் குல்,

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் ஐஸிக் குல் என்ற இடத்தில் கோல்டன் கழுகுகளை வைத்து சிலர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் வேட்டைக்காரர்கள் ஏவிய கழுகு ஒன்று அந்த சிறுமி அருகில் பறந்து வந்தது. 6 அடி நீள சிறகுகளை விசிறியடித்தபடி வந்த அந்தக் கழுகு, தனது இரை என நினைத்து சிறுமியைத் தூக்கிச் செல்ல முயன்றது. அப்போது அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சிறுமியை காப்பாற்றினர்.

இதில் அந்த சிறுமிக்கு தலை, கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com