இங்கிலாந்தில் இருந்து போலந்து செல்லும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு போலந்து நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இருந்து போலந்து செல்லும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை
Published on

வார்சா,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில், கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,79,030 ஆக உள்ளது. சுமார் 3.8 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், இதுவரை 74,858 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அங்கு சமீப காலமாக கொரோனா தொற்று நன்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் படிப்படியாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு தற்போது புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ், போலந்தில் தற்போது பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ், இதுவரை இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், அந்நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலந்து அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிலும், அண்மைக்காலமாக டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இங்கிலாந்தில் இருந்து போலந்து நாட்டுக்கு வரும் பயணிகள் கட்டாயம் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து வரும் இங்கிலாந்து பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், இந்த கட்டாய தனிமையை பின்பற்றியே ஆக வேண்டும் என போலந்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆதம் நெட்செல்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com