

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த வணிக வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது கியாஸ் கசிவு காரணமாக வணிக வளாகத்தில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. இதில் வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்தது. மேலும் இந்த பயங்கர வெடி விபத்து காரணமாக வணிக வளாகத்துக்கு அருகில் உள்ள ஏராளமான கடைகளில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.அதுமட்டுமின்றி வணிக வளாகம் அமைந்துள்ள சாலை வழியாக சென்ற 2 பஸ்களும் இந்த பயங்கர வெடிப்பில் சிக்கி உருக்குலைந்தன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.