பேஸ்புக் முடக்கத்தால் டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனர்கள்

பேஸ்புக் நிறுவனத்தின் முடக்கத்தால் 7 கோடி புதிய பயனர்களை டெலிகிராம் பெற்றிருப்பதாக அதன் சிஇஓ தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் முடக்கத்தால் டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனர்கள்
Published on

லண்டன்,

பேஸ்புக் மற்றும் அதற்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் கடந்த 4 ந் தேதி உலகளாவிய செயலிழப்பைச் சந்தித்தன. இந்த செயலிழப்பானது ஏறக்குறைய 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த நிலையில் உலக அளவில் பல லட்சம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஒரே நாளில் 7 கோடி புதிய பயனர்கள் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், ஒரே நேரத்தில் பலர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் அமெரிக்காவில் சில பயனர்கள் அதன் வேகம் குறைந்ததை உணர்ந்திருக்கலாம் ஆனாலும் பெரும்பாலான பயனர்களுக்கு வழக்கமாகவே வேலை செய்ததாக கூறினார்.

டெலிகிராம் உலகம் முழுவதிலுமிருந்து திடீரென அதிக பயனர்களைப் பெறுவது இது முதல் முறை அல்ல. வாட்ஸ்அப் தன்னுடைய புதிய தனியுரிமைக் கொள்கையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட போது கூட பல மில்லியன் கணக்கான பயனர்கள் டெலிகிராம் செயலியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com