நைஜீரியாவில் 2 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு

நைஜீரியாவில் 2 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு அவற்றின் மீது ராட்சத எந்திரத்தை ஏற்றி நசுக்கப்பட்டன.
நைஜீரியாவில் 2 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு
Published on

அபுஜா,

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள்களை வாடகை வண்டிகளாக பயன்படுத்தும் 'பைக் டாக்ஸி'-யால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதுமட்டும் இன்றி பைக் டாக்ஸி டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டு தகராறு மற்றும் வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த வகையில் அண்மையில் பைக் டாக்ஸியில் பயணம் செய்த 38 வயதான நபரிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்த டிரைவர் பணம் தராத ஆத்திரத்தில் அந்த நபரை அடித்துக்கொன்றார்.

இந்த சம்வபவம் நைஜீரியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து 'பைக் டாக்ஸி'க்கு தடைவிதிப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது.

இந்த நிலையில் நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் தடையை மீறி 'பைக் டாக்ஸி'யாக இயங்கிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு அவற்றின் மீது ராட்சத எந்திரத்தை ஏற்றி நசுக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com