இங்கிலாந்து நாட்டில் 75 சதவீதம் பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி

இங்கிலாந்து நாட்டில் 75 சதவீதம் பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு 8 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது. இவர்களில் 4 கோடியே 70 லட்சத்து 91 ஆயிரத்து 899 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரத்து 566 ஆகும். இது 75 சதவீத மக்கள் தொகை ஆகும். ஆக, அந்த நாட்டில் 4-ல் 3 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர்.

இதன்மூலம் அங்கு 2 கோடியே 20 லட்சம் பேர் தொற்று பரவலில் இருந்தும், 66 ஆயிரத்து 900 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதில் இருந்தும், 60 ஆயிரம் பேர் வரையில் மரணத்தில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர் என அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com